விருதுநகர் :
விருதுநகர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், செந்திக்குமார மீனாட்சியம்மாள் நடுநிலைப்பள்ளியில் ,மனித நேய வார விழா நடந்தது. செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் ,ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது. கலெக்டர் மு.பாலாஜி பேசுகையில்,"" மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவர்களை வைத்து பேச்சு, நாட்டியம், நாடக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மதத்தலைவர்கள் ஆதி திராவிட சான்றோர்கள் கலந்து கொள்ளும் மத நல்லிணக்க கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. வன் கொடுமை தடுப்பு சட்டம் குறித்து கருத்தரங்குகள், நீதிபதிகள், வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகளை கொண்டு நடத்தப்படவுள்ளன,'' என்றார்.
ஆதிதிராவிட பழங்குடியின நல அலுவலர் சத்தியவாசகன், தனித்தாசில்தார் உமாமகேஸ்வரி, பள்ளி தலைமையாசிரியை பாண்டிஈஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவு விழா ஜன. 30 ல் சத்திரரெட்டியபட்டியில் நடக்கவுள்ளது
No comments:
Post a Comment