TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, January 29, 2012

ஆதி திராவிடர் மாணவர்களுக்கான சிறு செலவு தொகை உயர்வு


சென்னை : நவம்பர் 06,2011,00:17 IST
பள்ளி, கல்லூரிகளில் பயிலும், ஆதி திராவிடர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சிறு செலவுகளுக்கான தொகையை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் ஆதி திராவிட மாணவ, மாணவியருக்கு, குளியல் சோப்பு, சலவைத் தூள், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக, மாதம் 25 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை, 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது; இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, 35 ரூபாய், இனி, 75 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதன் மூலம், கல்லூரி மாணவர்கள், 13 ஆயிரத்து 3 பேர், பள்ளி மாணவர்கள் 1 லட்சத்து 7 ஆயிரத்து 2 பேர் பயனடைவதால், அரசுக்கு ஆண்டுக்கு, 3 கோடியே 55 லட்சத்து, 55 ஆயிரத்து 700 ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், விடுதிகளில் தங்கி படிப்பதற்கு அதிகளவிலான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதால், நடப்பு கல்வியாண்டில் கூடுதலாக, 1,500 இருக்கைகளை ஏற்படுத்தவும், முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment