TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Saturday, February 4, 2012

தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளிக்கான மசோதா-04-02-2012


சென்னை: தேசிய சட்டப் பள்ளி என்ற பெயரில், புதிய பல்கலைக்கழகம் உருவாக்க, சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அது சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.
பெங்களூரில் உள்ள இந்திய தேசிய சட்டப் பள்ளியைப் போல, தமிழகத்திலும் தேசிய சட்டப் பள்ளியை துவக்க, அரசு முடிவு செய்தது. இம்முடிவை செயல்படுத்த, "தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளி" என்ற பெயரில், புதிய பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான மசோதாவை, சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்தார்.
இப்பள்ளியின் தலைமையகம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டத்தில் அமைக்கப்படும். சட்டத்தை கற்றல், சட்ட அறிவை பெறுதல், சட்ட வழிமுறைகளை அறிந்து கொள்ளுதல், தேசிய வளர்ச்சியில் அவற்றின் பங்கை மேம்படுத்துதல், வழக்காடும் திறமை, சட்டமுறை சேவைகள், சட்டம் இயற்றுதல், சட்ட சீர்திருத்தங்கள் போன்ற திறமைகளை, மாணவர்களிடமும் ஆராய்ச்சி அறிஞர்களிடமும் வளர்க்க, இந்தப் பள்ளி துவக்கப்படுகிறது.
இப்பள்ளிக்கு உள்ளேயோ, வேறு எங்குமோ பல்கலைக்கழகம் தேவையென கருதினால், வகுப்பறைகளையும், படிப்புக் கூடங்களையும் நிறுவலாம் என்றும், மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.

No comments:

Post a Comment