சென்னை, பிப். 4:
ஆதி திராவிடர் நலத் துறை மாணவ, மாணவியர் விடுதிகளின் காப்பாளர்களைக் கண்காணிக்க, அதே துறையில் பறக்கும் படை ஏற்படுத்த வேண்டும் என இந்தியக் குடியரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் சனிக்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது இக்கோரிக்கையை அவர் வலியுறுத்தினார்.
""விடுதிகளை நடத்துவது ஆதி திராவிடர் நலத் துறையாக இருந்தாலும், காப்பாளர்களைக் கண்காணிப்பது தனி வட்டாட்சியர்தான். அவர் வருவாய்த் துறையைச் சேர்ந்தவர் என்பதால், பல்வேறு பணிகளுக்கு இடையில் இதையும் கவனிப்பதில் சிரமம் இருக்கிறது. எனவே ஆதி திராவிடர் நலத் துறையில் பறக்கும் படை அமைத்து இதைக் கண்காணித்தால் பயன் உள்ளதாக இருக்கும். அரசு இதற்கு நடவடிக்கை எடுக்குமா?'' என செ.கு. தமிழரசன் கேட்டார்.
இதை அரசு பரிசீலிக்கும் என ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் பதில் அளித்தார்.
ஆதி திராவிடர் நலத் துறை மாணவ, மாணவியர் விடுதிகளின் காப்பாளர்களைக் கண்காணிக்க, அதே துறையில் பறக்கும் படை ஏற்படுத்த வேண்டும் என இந்தியக் குடியரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் செ.கு. தமிழரசன் கோரிக்கை விடுத்தார்.
No comments:
Post a Comment