திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர் விடுதிகளில் அமைச்சர் சுப்பிரமணியன் அதிரடி ஆய்வு நடத்தினார்.
பாளை அம்பேத்கர் மாணவியர் விடுதிக்கு ஆதிதிராவிடர் நலத் தறைஅமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவையான உணவு வழங்கப்படுகிறதா என மாணவிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் சுகாதாரம், மின் விளக்கு வசதிகள் மற்றும் விடுதியின் தரையில் பதிக்கப்பட்டுள்ள ஓடுகள் நல்ல நிலையில் உள்ளதா எனவும் சோதனை செய்தார்.விடுதியின் பண்டகசாலையில் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் முறையாக இருப்பு உள்ளதா எனவும் சோதனை செய்தார். தொடர்ந்து இந்த விடுதிக்கு அருகில் உள்ள ஆதிதிராவிடர் அரசினர் கல்லூரி மாணவியர் விடுதியிலும் ஆய்வு நடந்தது.பின்னர் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதி, பாளை புதிய பஸ்ஸ்டான்ட் அருகில் ஆதிதிராவிடர் அரசினர் இளநிலை, முதுநிலை பட்டதாரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் ஆகிய விடுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு சமைக்கப்பட்ட உணவின் தரத்தை ருசித்து பார்த்தார்.தொடர்ந்து மானூர் பஞ்., யூனியன் நல்லம்மாள்புரம் அரசு ஆதிதிராவிடர் மாணவியர் பள்ளியில் 2.87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கழிப்பறையை பார்வையிட்டு மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவிகளுக்கு அடிப்படை வசதிகள், கட்டப்பட்டு வரும் அறிவியல் ஆய்வு கூடங்களை அமைச்சர் சுப்பிரமணியன் பார்வையிட்டு குறைகளை கேட்டறிந்தார்.
நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ளமாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.துலுக்கர்பட்டி ஆதிதிராவிடர் உயர்நிலைப் பள்ளி, மேலஇலந்தைகுளம் அரசு மாணவர் விடுதி ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்த அமைச்சர் அங்கு குறைகளை கேட்டறிந்து அதற்கு தேவையான உத்தேச மதிப்பீட்டினை அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.மானூர் பஞ்., யூனியன் அலுவலகத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் மற்றும் இளைஞர் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு சுமை தூக்கி ஆட்டோக்களையும், ஒரு நபருக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் வாடகை வாகனம், ஒரு நபருக்கு டாடா சுமோ வாடகை வாகனம் ஆகியவற்றை அரசு மானியமாக 6.26 லட்சம் மானியத்துடன் 21.81 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார்.
இதில் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மாநகர் மாவட்ட செயலாளர் சுதா பரமசிவன், தச்சை மண்டல தலைவர் மாதவன், கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பஞ்., கவுன்சிலர்கள் செந்தில்வேல், கண்ணம்மாள், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் ஐதர் முகம்மது அலி, தாட்கோ செயற்பொறியாளர் தேவராஜலூ, பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜேக்கப், மாடசாமி, லட்சுமி, பஞ்., யூனியன் கவுன்சிலர் காளிதாஸ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டன

No comments:
Post a Comment