TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Thursday, February 23, 2012

சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் விடுதிகளில் இலங்கைத் தமிழ் மாணவர்கள் சேரலாம்


சென்னை, பிப்.21 (டிஎன்எஸ்) 

சென்னையில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதிகளில், முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவர்களை சேரலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகளில் 2011-2012-ஆம் ஆண்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மாணவர்கள் தங்கிப் படிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு விடுதியிலும் 5 மாணவர்கள் வீதம் சேரலாம். எனவே தகுதியும் விருப்பமும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
Feb 21, 2012

No comments:

Post a Comment