TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, February 22, 2012

சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு தேர்வானவர்களின் பட்டியல்

சென்னை, பிப். 22 : 
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள்  தங்களது பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து 90 தையல் ஆசிரியர்கள், 309 ஓவிய ஆசிரியர்கள் மற்றும் 39 இசை ஆசிரியர்கள் பணிக்காலியிடங்களுக்கான காலியிட அறிவிக்கை பெறப்பட்டது. இப்பணிக் காலியிடங்கள் மாநில அளவில் அமைந்த 31.1.2012 அன்றைய நிலவரப்படி தகுதியுள்ள வேலைவாய்ப்பக பதிவுதாரர்களின் பெயர், பதிவு மூப்பு விவரங்கள், பாடவாரியாகவும், இனவாரியாகவும் www.tn.gov.in என்கிற தமிழக அரசின் இணைய தளத்தினில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், இவ்விணையதளத்தில் மேற்கூரிய பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, இன சுழற்சி விவரங்கள் ஆகியவற்றையும் காணலாம். மேற்படி இணையதளத்தில் மனுதாரர்கள் தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பரிந்துரை பதிவு மூப்பு தேதிக்குள் தகுதியுள்ள மனுதாரர்கள் எவரும் விடுபட்டிருப்பின் அவர்கள் தாங்கள் பதிவு செய்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தினை உரிய ஆதாரத்துடன் 27.02.2012 தேதிக்குள் நேரில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 27.02.2012 தேதிக்குப் பின்னர் தொடர்பு கொள்ளும் மனுதாரர்களின் கோரிக்கை ஏதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment