TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Tuesday, February 28, 2012

மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் மேலாண்மை வளர்ச்சிக்குழு பயிற்சி


திருநெல்வேலி:மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்குநேரி வட்ட பள்ளி மேலாண்மை மற்றும் வளர்ச்சிக்குழு பயிற்சி பணிமனை நடந்தது.
இப்பயிற்சியில் நான்குநேரி வட்டத்திலுள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளான வடக்கு விஜயநாராயணம், திருவேங்கடநாதபுரம், காரியாண்டி, முனைஞ்சிப்பட்டி, நான்குநேரி மகளிர், கரந்தாநேரி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளான நான்குநேரி சங்கர் ரெட்டியார், ஏ.வி.ஜெ., இட்டமொழி, தளபதிசமுத்திரம், பரப்பாடி, மூலைக்கரைப்பட்டி, மருதகுளம், ஆதிதிராவிடர் நலப் பள்ளி கடன்பன்குளம் ஆகிய பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு நான்குநேரி யூனியன் துணைத் தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். மூலைக்கரைப்பட்டி டவுன் பஞ்., தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்தார். மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் நெடுஞ்செழியன் வரவேற்றார்.நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட மாவட்ட திட்ட அலுவலருமான பகவதி சிறப்புரையாற்றினார். அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி., மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தங்கராஜா சிறப்பு கருத்தாளராக கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு கருத்துரை வழங்கினார்.இட்டமொழி தலைமையாசிரியர் ஆர்தர்டேவிட், மருதகுளம் தலைமையாசிரியர் ஜாண்சன், மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காந்தி, மூலைக்கரைப்பட்டி டவுன் பஞ்., முன்னாள் தலைவி பார்வதி, காரியாண்டி பாண்டுரெங்கன் பேசினர்.காரியாண்டி, ஆழ்வாநேரி, இலங்குளம் பஞ்., தலைவர்கள் கலந்து கொண்டனர்.முன்னதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி, மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் காந்தி அன்பளிப்பாக வழங்கிய பேச்சுமேடை, ஆசிரியை தர்மமணி அன்பளிப்பாக வழங்கிய அலமாரி ஆகியவற்றை பெற்றுக் கொண்டு பள்ளிக்கு வழங்கினார்.ஏற்பாடுகளை தலைமையாசிரியர் நெடுஞ்செழியன், விக்டோரியா ஆகியார் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment