TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Tuesday, February 28, 2012

விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டத்தைகண்டித்து அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்

திருநெல்வேலி:விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை கண்டித்து நெல்லையில் மத்திய அரசு நிறுவனங்களின் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். பாங்குகள், இன்சூரன்ஸ் அலுவலகங்கள், வருமான வரித்துறை அலுவலகங்கள் முழுவதும் இயங்காததால் அலுவலக பணிகள் ஸ்தம்பித்தது.விலைவாசியை கட்டுப்படுத்து, பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே, தொழிலாளர் நலச்சட்டங்களை மீறும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடு, வேலையிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கு, போனஸ், கிராச்சுவட்டி சட்டங்களை மாற்றியமை, அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு, தொழிற்சங்க உரிமைகளை பறிக்காதே, பாங்குகளை தனியார் மயமாக்காதே, பாங்க் துறையில் ஒப்பந்த தொழிலாளர் முறையை நுழைக்காதே, எல்.ஐ.சி., ஜி.ஐ.சி., நிறுவனத்தை பலவீனப்படுத்த முயலாதே, மின்தடையை நீக்கு, பால், பஸ் கட்டண உயர்வை திரும்பபெறு என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பாங்க் ஊழியர் சம்மேளனம் சார்பில் பாளை., ஸ்டேட் பாங்க் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஏஐபிஇஏ., ரெங்கன் தலைமை வகித்தார். ஏஐபிஓஏ., முருகன், என்சிபிஇ., எட்வின், கூட்டுறவு ஊழியர் சங்கம் ராமசுப்பிரமணியன், எஸ்.இ.பி.ஐ., முத்தையா வாழ்த்துரை வழங்கினர். பாளை., எல்.ஐ.சி., கோட்ட அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 16 கிளைகளில் இருந்து திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பாங்க், எல்.ஐ.சி., ஜெனரல் இன்சூரன்ஸ், வருமான வரித்துறை மற்றும் பொதுத்துறை, மத்திய அரசு நிறுவன ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் பணிகள் தடைபட்டது. நெல்லை மாவட்டத்தில் இன்சூரன்ஸ், பாங்க், வருமானவரித்துறை ஆகிய அலுவலகங்களில் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் அந்த அலுவலகங்கள் இயங்கவில்லை. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் அலுவலகங்கள் வெறிச்சோடியது.
நெல்லை மாநகரத்தில் இன்சூரன்ஸ் துறையில் 130 பேரும், பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் 30 பேரும், தபால் துறையில் 96 பேரும், அரசு ஊழியர் சங்கத்தில் 3 பேரும், வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தில் 13 பேரும், ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தில் 88 பேரும் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். ஆல் இந்தியா ரேடியோ நிறுவனத்தில் 2 பேரும், அங்கன்வாடி ஊழியர்கள் 23 பேரும், ஆசிரியர்கள் 23 பேரும், பாங்க் ஊழியர்கள் 225 பேரும் ஸ்டிரைக்கில் பங்கேற்றனர். பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் 40 பேரும், வருமானவரித்துறையில் 45 பேரும், நுகர்பொருள் வாணிப கழகத்தில் 13 பேரும், குடிநீர் வடிகால் வாரியத்தில் 10 பேரும், மின்சார வாரியத்தில் 31 பேரும், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் 48 பேரும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
இன்சூரன்ஸ் துறையை பொறுத்த வரையில் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டத்திலுள்ள 16 கிளைகள் இயங்கவில்லை. பாங்க் வளர்ச்சி அதிகாரிகள், எல்.ஐ.சி.முகவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments:

Post a Comment