பதிவு செய்த நாள் 12/16/2011 12:39:50
நெல்லை: நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் ஆதி திராவிடர் பள்ளி ஆசிரியர்கள், விடுதி காப்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 19 தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள், 70 விடுதிகள் உள்ளன. இதில் ஆசிரியர், விடுதி காப்பாளர்கள் கலந்தாய்வில் முறைகேடு நடந்ததாகவும், பதவி உயர்வு வழங்குவதில் விதிமீறல் இருப்பதாகவும் கூறி தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆசிரியர்கள், காப்பாளர் முற்போக்கு கூட்டணியினர் குற்றஞ்சாட்டிவந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை இக்கூட்டணி பொறுப்பாளர்கள் 8 பேர் மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்துக்கு வந்து முறைப்படி பதவி உயர்வு ஆணை வழங்க கோரிக்கை விடுத்தனர்.
மேலும், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அங்கேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இரவு 10 மணி வரை அவர்களுடன் ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் முகமது ஹைதர் அலி பேச்சுவார்த்தை நடத்தினார்.
உறுதியான உத்தரவு தரும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என்று போராடியவர்கள் கூறியதால் கலெக்டரிடம் கலந்தாலோசித்து பதிலளிப்பதாக கூறி அலுவலர் வெளியேறினார்.
இதை தொடர்ந்து 8 பேரும் அங்கேயே படுத்தனர். இது குறித்து கூட்டணியின் மாவட்ட தலைவர் முருகானந்தம் கூறுகை யில், ‘இடைநிலை ஆசிரியருக்கான பதவி உயர்வு பட்டியலில் 21வது இடத்தில் இருப்பவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. முன்னால் உள்ள 20 பேருக்கும் நல்ல தீர்வு கிடைக்கவேண்டும். கவுன்சலிங் ரகசிய அறையில் நடத்தப்பட்டது. இதை கண்டிக்கிறோம்.’ என்றார்.
மாவட்ட செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் குருசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஜெயசங்கர் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment