சென்னை: அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், துப்புரவாளர் மற்றும் காவலர்கள், 5,000 பேரை பணி நியமனம் செய்ய, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
5,000 பணியிடங்கள்: பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்ட அரசாணை: கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் உள்ளிட்ட இதர பணிகளுக்காக, ஆசிரியர் அல்லாத, 5,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, மாணவர் எண்ணிக்கை, 500க்கும் குறைவாக உள்ள, 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஒரு பணியிடமும்; 500க்கும் அதிகமாக மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட, 996 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கும், 1,005 மேல்நிலைப் பள்ளிகளுக்கும், தலா இரண்டு பணியிடம் என, ஆசிரியர் அல்லாத மொத்தம், 5,000 பணியிடங்களை அனுமதிக்குமாறு, பள்ளிக்கல்வி இயக்குனர் கோரியிருந்தார்.
ஊதிய விவரம்
இதை ஆய்வுசெய்த தமிழக அரசு, 998 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா ஒரு துப்புரவு பணியிடத்தை ஏற்படுத்தி, 1,300 - 3,000 ரூபாய் மற்றும் தர ஊதியம் 300 ரூபாய் என்ற சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில், இவர்கள் நியமிக்கப்படுவர். மேலும், 996 உயர்நிலைப் பள்ளிகள், 1,005 மேல்நிலைப் பள்ளிகளுக்கு, தலா ஒரு துப்புரவாளர் மற்றும் ஒரு காவலர் பணியிடமும் ஏற்படுத்தி, அரசு உத்தரவிடுகிறது. காவலர்கள், 4,800 - 10 ஆயிரம் ரூபாய் மற்றும் தர ஊதியம் 1,300 ரூபாய் என்ற காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்படுவர். இவ்வாறு சபீதா தெரிவித்துள்ளார்.
தேர்வு எப்படி?
அரசு அறிவித்துள்ள 5,000 பணியிடங்களும், மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஏற்றவாறு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த பணியிடங்கள், மாவட்ட அளவிலான வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின்படி, நிரப்பப்படும். &'ரெகுலர்&' அடிப்படையிலான இந்த பணியிடங்களுக்காக, ஆண்டுக்கு, 60 கோடி ரூபாய் அரசுக்கு செலவு ஏற்படும் என, செயலர் தெரிவித்தார்.
இரு பணிகளுக்கும், எட்டாம் வகுப்பு கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம் கிடையாது; படித்திருந்தால் போதுமானது என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
No comments:
Post a Comment