சென்னை:
உயர்கல்வியில், தகவல் தொழில்நுட்பம் அல்லாத, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல் உட்பட பல்வேறு திட்டங்களை, தமிழகத்தில் செயல்படுத்த உள்ளதாக, முதல்வர் ஜெயலலிதாவிடம், மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் தெரிவித்தார்.
பாராட்டு: சர்வதேச மைக்ரோசாப்ட் நிறுவன தலைவர் ஜீன் பிலிப்பி கோர்டாய்ஸ், முதல்வர் ஜெயலலிதாவை தலைமை செயலகத்தில் சந்தித்தார். கல்வி, மின் ஆளுமை போன்ற துறைகளில் மேலும் முதலீடுகள் செய்வது தொடர்பாக பேச்சு நடத்தியதுடன், கல்வித் துறையில், தமிழக முதல்வர் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டினார்.
கடந்த 2005ல், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தகவல் தொழில்நுட்பக் கல்வியை அளிப்பது தொடர்பாக, தமிழக அரசுடன், மைக்ரோசாப்ட் நிறுவனம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை, அவர் நினைவுபடுத்தினார். மேலும், &'உயர்கல்வியில், தகவல் தொழில்நுட்பம் அல்லாத, ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல்; தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல்; மற்ற ஆசிரியர்களுக்கு, அவர்கள் பயிற்சி அளித்தல்; உயர்கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாணவர்களை, தொழில்முனைவோர் ஆக்குதல்; புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவித்தல்; கிளவுடு கம்ப்யூட்டிங் மையங்களை உருவாக்குதல் போன்ற திட்டங்களை, மைக்ரோசாப்ட் நிறுவனம் செயல்படுத்த விரும்புகிறது,&' என, அதன் தலைவர் தெரிவித்தார்.
முதல்வர் உறுதி: பயிற்சி திட்டங்கள் மற்றும் கிளவுடு கம்ப்யூட்டிங் மையங்கள் ஆகியவற்றில், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட, அனைத்து உதவிகளையும் செய்வதாக, முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். இந்திய மைக்ரோசாப்ட் தலைவர் பாஸ்கர் பிரமநாயக்; இயக்குனர்கள் ரன்பீர் சிங், பிரதிக் மேத்தா; வர்த்தக மேலாளர் ஆலன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment