23 Jan) விழுப்புரம்,
ஜன.22: தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட ஆதிதிராவிடர் நலத்துறைக்கு இந்த ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ரூ.1,084 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ÷
தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில மாநாடு விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநாட்டில் அம்பேத்கர், சங்க நிறுவனர் கே.எஸ்.அந்தோணிசாமி ஆகியோரின் படங்களைத் திறந்து வைத்து, அந்தோணிசாமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவியை சங்கத்தின் சார்பில் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
÷ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும் கெüரவித்தார். பின்னர் இத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 40 ஆண்டு கால அரசாணைகளின் தொகுப்புப் புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பேசியது:
÷இந்த சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இத்துறைக்கு ரூ.1,084 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 34 அரசாணைகள் மூலம் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ÷6.38 லட்சம் மாணவர்கள் கல்வியின் தரத்தை உயர்த்திக் கொள்ள ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக அவர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்க ஆணையிட்டுள்ளார். ÷வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் மாணவர் விடுதிகளுக்கு சொந்தக் கட்டடம் கட்ட இந்த ஆண்டு 50 விடுதிகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளார். நலப்பள்ளிகளில் நூறு சதவீதம் தேர்ச்சிபெறும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், ஒவ்வொரு பிரிவு ஆசிரியர்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கவும் ஆணையிட்டுள்ளார் என்றார்.
÷மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் தலைமை தாங்கினார். அமைப்புச் செயலர் பி.சிவக்குமார், மகளிரணி செயலர் ஆர்.காந்திமதி, துணைப் பொதுச்செயலர் ஆர்.திருக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ÷பொதுச்செயலர் சி.ஜெயக்குமார் வரவேற்றார், பொருளாளர் வெ.பாலையன் அறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் வி.அண்ணாமலை கோரிக்கைகளை முன்மொழிந்தார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் க.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். ÷மாவட்டச் செயலர் எஸ்.சக்திவேல் நன்றி கூறினார். ÷முன்னதாக பேரணியை மாவட்டத் தலைவர் எல்.கோவிந்தராஜுலு தலைமையில் மக்களவை உறுப்பினர் எம்.ஆனந்தன் தொடங்கி வைத்தார். மாநில ஆலோசகர் எம்.ராஜு சங்கக் கொடியேற்றினார்.
÷கருத்தரங்கம்: கருத்தரங்கிற்கு ஒருங்கிணைப்பாளர் காஞ்சி க.மனோகரன் தலைமை தாங்கினார், கொள்கைபரப்புச் செயலர் வி.கலையரசன், தலைமை நிலையச் செயலர் என்.மதிஒளி, மகளிரணி துணைச் செயலர் கே.இந்திராதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை பொதுச்செயலர் எம்.அற்புதநாதன் வரவேற்றார். ÷கருத்தரங்கில் பல்வேறு சங்க நிர்வாகிகள் டி.சுப்பிரமணியம், என்.மகாராஜன், எஸ்.பாலசுந்தரம், சிவ.முருகேசன், வே.மணிவாசகன், தெ.வே.சஞ்சீவிராயன், சி.சேகர் ஆகியோர் பேசினர்.

No comments:
Post a Comment