TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Friday, March 23, 2012

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி: 
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உயர்வு மூலம் 58 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 65 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மத்திய அரசுக்கு கூடுதலாக 7500 கோடி ரூபாய் செலவு ஏற்படும். அகவிலைப்படி உயர்வு காரணமாக 60 லட்சம் ஊழியர்களும், 30 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயனடைவார்கள். 

No comments:

Post a Comment