TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, March 18, 2012

ஆதிதிராவிடர், பழங்குடியினர் பள்ளிகளுக்கு தனி இயக்குனரகம் அமைத்திட கோரிக்கை

விழுப்புரம்:


தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கத்தின் மாநில மாநாடு விழுப்புரத்தில் நடந்தது.விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து துவங்கிய பேரணியை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜூலு துவக்கி வைத்தார். மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் சிவக்குமார், காந்திமதி, திருக்குமரன் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். பொருளாளர் பாலையன் அறிக்கை வாசித்தார். சங்க ஆலோசகர் அண்ணாமலை கோரிக்கையை முன்மொழிந்து பேசினார். கல்வி அமைச்சர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள் மற்றும் விடுதிகளை ஒருங்கிணைத்து தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment