விருத்தாசலம், செப். 9&
தமிழக ஆதிதிராவிடர், ஆதிவாசிகள் நலத்துறை, ஆசிரியர் காப்பாளர் சங்க மாநில தலைவர் பாக்கியராஜ் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கடலூர் மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான எஸ்எம்எஸ் அனுப்பு முறை சாத்தியமில்லாதது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத நடைமுறையை கடலூர் மாவட்ட கலெக்டர் நடைமுறைப்படுத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல. இம்முறையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எனவே, பள்ளி கல்வி நிர்வாகத்தினை நிர்வாகிக்கும் அலுவலர்களின் துணை கொண்டு சிறப்பாக, முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாக்கும் எஸ்எம்எஸ் முறையை நீக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment