தினமலர் முதல் பக்கம் » பொது செய்தி »தமிழ்நாடு
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011,22:11 IST
திருவள்ளூர் : மாவட்டத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிட மாணவியருக்கும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும், பாராட்டு விழா திருவள்ளூரில் நடந்தது. தமிழக ஆதிதிராவிடர் - ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கத்தின் சார்பில் நடந்த இவ்விழாவுக்கு, மாவட்டத் தலைவர் பி.கிருபாகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் டி.கிருபாகரன் வரவேற்றார். ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதலிடம் பிடித்த ஆனந்தி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவி அனிதா ஆகியோருக்கு, கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ரமணா, பரிசுகளை வழங்கி பாராட்டினார். மேலும், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற, 14 ஆசிரியர்களுக்கும் கேடயம், கைக்கடிகாரம் வழங்கி அவர் பாராட்டினார். இவ்விழாவில் எம்.எல்.ஏ., மணிமாறன், மாநில நிர்வாகிகள் பாக்யராஜ், ஜெயக்குமார், பாலையா, ஒருங்கிணைப்பாளர் மனோகரன், மாவட்டப் பொருளாளர் தாமோதரன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment