First Published : 17 Jul 2011 08:38:47 AM IST
திருவள்ளூர், ஜூலை 16: தமிழக ஆதிதிராவிடர் - ஆதிவாசிகள் நலத்துறை ஆசிரியர் -காப்பாளர் சங்கம் சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை திருவள்ளூரில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பி. கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு மாநில துணைத் தலைவர் திருப்பதி, செயற்குழு உறுப்பினர் தாமஸ், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் டி. கிருபாகரன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ. மணிமாறன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் பி.வி. ரமணா பங்கேற்று ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் உழைப்பு மற்றும் சாதனைகள் குறித்து பாராட்டி பேசினார்.
தொடர்ந்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் சம்பத், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் நிர்மலா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment