தாம்பரம், ஜூன். 2-
ஆதி திராவிடர் நலத்துறை ஆசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்களுக்கு ஆண்டு தோறும் மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மாவட்ட வாரியாக கலந்தாய்வு நடைபெறாமல் குரோம் பேட்டை நாகல்கேணியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் கவுன்சிலிங் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆசிரியர்கள் குரோம்பேட்டைக்கு வந்தனர். கவுன்சிலிங் நடைபெறும் பள்ளி முன்பு திரண்டு திடீரென கோஷம் எழுப்பினார்கள்.
அந்தந்த மாவட்டத்திலேயே கவுன்சிலிங் நடத்த வேண்டும். அதை விடுத்து ஒரே இடத்தில் கவுன்சிலிங் நடத்தினால் சிரமம் ஏற்படுவதாக ஆணையர் சிவசங்கரனை சந்தித்து ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர்.
அதற்கு அவர் உங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கிறேன் என்று கூறினார்