தமிழக ஆதிதிராவிடர் ஆதிவாசிகள் நலத்துறை
ஆசிரியர் காப்பாளர் சங்கம். விருதுநகர்
மாவட்டக் கிளை.
மாவட்டச்
செயற்குழு.
நாள்: 15.12.12 ( சனிக்கிழமை) இடம் : அஜய் ரெஸ்டாரெண்ட்,
திருவில்லிபுத்தூர்.
.
எமது உறவினும் மேலான உறவுகளுக்கு……!
வணக்கம்.கடந்த மாவட்டச்செயற்குழு
26.10.12
அன்று
நடைபெற்றது.அதுமுதல் நாளது வரை சங்கம் சாதித்த சாதனைகளையும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும்
இன்பங்களையும் இச்செயற்குழுவில் பதிவு செய்வதில் சங்கம் பேரானந்தமும் பெருமகிழ்ச்சியும்
அடைகிறது.
29.10.2012 அன்று நமது சங்க மகளிர் அணிச் செயலாளரும் சுந்தரராசபுரம் விடுதிக்காப்பாளினியுமான
திருமதி அ.செல்லம்மாள் விடுதியைப் புதிய கட்டிடத்திற்கு தன்னிச்சையாக மாற்றியதாகக்
கூறி அவரிடம் நேரடியாக விளக்கம் கேட்டு DADWO அழைத்தபோது அவருடன் நமது சங்க மாவட்டத்தலைவர்,
மாவட்டச்செயலாளர் மற்றும் கொள்கைப்பரப்புச் செயலாளர் ஆகியோர் இரவு 7 மணி அளவில் சென்று
அலுவலரிடம் விளக்கம் அளித்து நமது சங்க மகளிர் அணிச் செயலாளர் தன்னிச்சையாக அந்த முடிவை
எடுக்கவில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டது.
29.10.2012 அன்று விருதுநகர் மாணவர்
விடுதியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றபோது விடுதிக்காப்பாளரும் நமது சங்க கொள்கைப்பரப்புச்
செயலாளருமான திரு அ.பால்ராஜ் அவர்களுக்கு ஆதரவாக மாவட்டத்தலைவர் திரு சி.சின்னராசு
அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் தலைமையில் மாவட்டப்
பொருளாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் திரண்டு இரவு 8 மணிவரை அவருடனிருந்து நிர்வாகரீதியான
பிரச்சினைகள் அவருக்கு ஏற்படாதவண்ணம் சங்கம் அவரைப் பாதுகாத்தது.
07.11.2012 அன்று குறிப்பிட்ட சமூகத்தினரால்
மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டு பேருந்துகள் எதுவும் இயக்கப்படாத நிலையில் மாநில
அமைப்புச் செயலாளரும் சாத்தூர் மாணவர் விடுதிக் காப்பாளாராகப் பணிபுரியும் திரு பொ.சிவக்குமார்
அவர்கள் விடுதியில் DADWO அவர்கள் நண்பகல் 12.20 மணிக்கு திடீர்த்தணிக்கை மேற்கொண்டார்.அவர்
மீது வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு சம்பந்தமில்லாமல் முந்தைய நாள் வருகையைக்
கணக்கிட்டு அவருக்குக் “காரணம் கேட்கும் குறிப்பாணை” வழங்கப்பட்டது. இதன்மீது சங்கம்
உடனடியாகத் தலையிட்டு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் மீதான மேல் நடவடிக்கை
கைவிடப்பட சங்கம் காரணமாக அமைந்தது.
07.11.2012 அன்று நமது சங்க கொள்கைப்பரப்புச்
செயலாளரும் விருதுநகர் விடுதிக்காப்பாளருமான திரு அ.பால்ராஜ் அவர்கள் மீது உள்நோகத்தோடு
பொய்ப்புகார்களைச் ஜோடனை செய்து திடீரென கோட்டையூர் பள்ளிக்கு தமிழாசிரியராகப் பணியிடமாறுதல்
செய்யப்பட்டார்.இதுகுறித்து உடனடியாக SMS மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு இரவு 10 மணி
அளவில் நிர்வாகிகள் 10 பேர் கலந்து கொண்ட அலைபேசி வழியேயான CONFERRENCE
CALL MEETTING ல் நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு 08.11.12 அன்று DADWO விடம் நேரில் விளக்கம்
கேட்கப்பட்டது.அலுவலர் அவர்கள் முறையான பதிலளிக்க மறுத்ததால் “அரசாணைக்கு எதிராக முறையற்றவாரு
வழங்கிய உத்தரவுக்கு எமது உறுப்பினர் அடிபணிய மாட்டார்” என்பதனையும் இதே நிலை தொடர்ந்தால்
அலுவலரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம், போராட்டம்,பத்திரிக்கைச் செய்தி போன்ற போராட்ட வியூகங்களை
வகுக்கச் சங்கம் தயங்காது என்று DADWO விடம் ஆணித்தரமாகவும் கடுமையாகவும் பதிவு செய்தது இச்சங்கம்.
அதன் பின்னர் உடனடியாக
பெரும்பான்மையான சங்க உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இது சம்பந்தமாகப்
புகார் மனு அளிக்கப்பட்டு “அரசாணைக்கு எதிராக இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது” என்பதனைச்
சுட்டிக்காட்டியதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உடனடியாக இவ்வுத்தரவை இரத்து செய்ய அலுவலரைக்
கேட்டுக்கொண்டார்.
ஆனால் தன்னிலையை மாற்றிக்கொள்ள
விரும்பாத அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வாய்மொழியாகப் பல்வேறு பொய்ப் புகார்களைக் கூறியதன்
விளைவாக உடனடித் தீர்வு எட்டப்படாததால் 16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியர்
நமது சங்கத்தையும் DADWO வையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார்.
16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியர்
முன்னிலையில் நமது சங்க மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட காப்பாளர்
திரு அ.பால்ராஜ் அவர்களோடு DADWO உள்ளிட்டோர் கலந்து கொண்ட பேச்சு வார்த்தையின் போது அன்னாருக்கு
வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவை இரத்து செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலரை அறிவுறுத்தினார்.
அதன் பின்னர் நடைபெற்ற
மாவட்ட ஆட்சியரின் கப்பாளர்கள் மற்றும் காப்பாளினிகளுக்கான ஆய்வுக்கூட்டத்தில் DADWO விடம் நமது சங்கத்தைச்
சேர்ந்த மாநில அமைப்புச் செயலாளர் திரு பொ.சிவக்குமார், மாநிலத்துணைத்தலைவர் திரு.மா.கோவிந்தராசு,மாவட்டத்
தலைவர் திரு சி.சின்னராசு, மாவட்டச் செயலாளர் திரு இ.வெள்ளத்துரை, மாவட்டத் துணைத்தலைவர்
திரு இரா.யுவராஜா,உறுப்பினர் திரு சு.இராஜன் ஆகியோர் நமது நிர்வாக ரீதியிலான பிரச்சினைகளை
மிக நேர்த்தியாக எடுத்துரைத்தனர்.
22.11.2012 காப்பாளர் திரு அ.பால்ராஜ்
அவர்களின் பணி மாறுதல் உத்தரவை இரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு ஒரு வரத்துக்கு
மேலாகியும் அவ்வுத்தரவு DADWO அவர்களால் அனுப்பப்படாததால் மாவட்டத் தலைவர் அவர்களின் வழிகட்டுதலின்
படி மாவட்டப் பொருளாளர், மாவட்டத் துணைத்தலைவர்,மாவட்டத் தலைமை நிலையச் செயலாளர் ஆகியோர்
சென்று DADWO விடம் உத்தரவின் விபரத்தினைக் கேட்டறிந்தனர்.
23.11.2012 அன்று சங்கத்தின் எதிர்பார்ப்புக்கு
மாறாக திரு அ.பால்ராஜ் அவர்களின் பணிமாறுதல் உத்தரவை இரத்து செய்து அதே விடுதியில்
நீடிக்கச் செய்வதற்குப் பதிலாக நரிக்குடி மாணவர் விடுதிக்கு பணியிடமாறுதல் செய்து DADWO அவர்களால் உத்தரவு வழங்கப்பட்டது.
26.11.2012 அன்று இரவு 7 மணி அளவில்
இதற்கான காரணம் கேட்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் அவர்களை மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர்,மாவட்டப்
பொருளாளர், மாவட்டத் துணைத்தலைவர், மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் ஆகியோர் சந்தித்து
விளக்கம் கேட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் “நரிக்குடி
மாணவர் விடுதியில் அவரைப் பணியில் சேரச் சொல்லுங்கள் ஒரு வாரத்திலிருந்து ஒரு மாதத்திற்குள் அவருக்கு நானே அதே பணியிடத்தில் மாறுதல்
பெற்றுத்தருகிறேன்” என்று கூறிய உறுதிமொழியின் அடிப்படையிலும், தற்போதைய ஆட்சியர் அவர்கள்
நமது சங்கத்தின் கோரிக்கைகளை நியாமான முறையில் பரிசீலிக்கிறார் என்ற நம்பிக்கையின்
அடிப்படையிலும் ,தொடர்ந்து விருதுநகர் விடுதியில் பணி புரிந்து பல்வேறு இன்னல்களுக்கும்
மன உளைச்சல்களுக்கும் ஆளாகும் திரு பால்ராஜ் அவர்களுக்கு நிவாரணம் பெரும் பொருட்டும்
அன்னாரது விருப்பத்தின் அடிப்படையிலும் அவர் நரிக்குடி விடுதியில் பணியில் சேர நமது
சங்கம் வழிகாட்டியது.
மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து
மேற்காணும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில் நாம் இங்கிருப்பதைத் தெரிந்து
கொண்டே DADWO அவர்கள் மாலை 6 மணிக்குப் புறப்பட்டு மாவட்டத்தலைவர், மாவட்டச்செயலாளர்
ஆகியோர் பணிபுரியும் தளவாய்புரம்,ஜமீன் கொல்லங்கொண்டான் மற்றும் தளவாய்புரம் மாணவியர்
விடுதிகளை இரவு 8 மணிக்கு மேல் திடீர்த்தணிக்கை செய்தார்கள்
இத்திடீர்த்தணிக்கையின்
விபரம் துணைச் செயலாளர் திரு அ.ஸ்கைலாப் அவர்களால் அனைவருக்கும் SMS மூலம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத்தலைவர்
DADWO
அவர்களை
அலைபேசியில் தொடர்பு கொண்டு தனது விடுதி பற்றிய விபரத்தினையும் தான் தற்சமயம் விடுப்பிலிருக்கும்
விபரத்தினையும் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் இந்நேரத்தில் விடுதிகளைத் திடீர்த்தணிக்கை
செய்ய வேண்டிய அவசரம் மற்றும் அவசியத்தினையும் கேட்டறிந்தார்.
பின்னர் மாவட்டத்தலைவரின்
அறிவுரையின்படி மாவட்டச் செயலாளர் திரு இ.வெள்ளத்துரை DADWO அவர்களை அலைபேசியில் தொடர்பு
கொண்டு “என்னம்மா இராத்திரி நேரத்துல களவாணிப் பயலுகளப் புடிக்க வர்ர மாதிரி வர்ரீங்க..”
என்றும் “ என் விடுதில ரெண்டு மாசமா கரண்டு இல்ல ணும்,மோட்டார்
பம்பு ரிப்பேர்ணும்,தண்ணி குழாய்லாம் உடஞ்சு கிடக்குணும்,கிரைண்டர் ரிப்பேர்ணும் உங்ககிட்ட
கம்ப்ளைண்ட் கொடுத்தேன்..நீங்க தாசில்தாரு மூலமா கொடுக்கச் சொன்னீங்க..அதுவும் கொடுத்து
ஒரு மாசமாச்சு..ஆனா ஒரு ஆக்சனும் இல்ல..அதெல்லாம் சரிபண்ணிக் கொடுத்துட்டு நைட்டு
10 மணிக்குக் கூட வாங்கம்மா..”என்றும் கடுமையாகப் பேசியதன் விளைவாகவும்……………….
துணச்செயலாளர் அனுப்பிய
SMS செய்தியைப் படித்த துணைத்தலைவர்
திரு இரா.யுவராஜா தனது அலைபேசி அணைந்த நிலையிலும் அந்த இரவு நேரத்திலும் தனது ஊர் செல்லும்
பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டும் தன்னந்தனியாக மாவட்ட ஆட்சியரை அவரது பங்களாவில்
இரவு 9.30
மணியளவில்
சென்று நேரில் சந்தித்து “எமது சங்கத்தின் மாவட்டத்தலைவர் மற்றும் மாவட்டச் செயலாளர்
விடுதிகளை இரவு 8 மணிக்கு மேல் திடீர்த்தணிக்கை செய்வது எமது சங்க நிர்வாகிகளைப் பழிவாங்கும்
நடவடிக்கையின் பாரபட்சமான அங்கம்”என்பதைப் பதிவு செய்ததன் விளைவாகவும்………
மாவட்ட ஆட்சியர் DADWO வை அழைத்துக் கடிந்து
கொண்டதன் காரணமாகவும் அலுவலர் அவர்கள் தனது போக்கை மாற்றிக் கொண்டதுடன்..அதுவரை தணிக்கை
செய்த விடுதிக்காப்பாளர்களுக்கு வழங்கப்படவிருந்த குற்றக்குறிப்பாணைகள் இரத்து செய்யப்பட்ட
நிகழ்வு நமது சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது…நமது சங்கம் சாராத
காப்பாளர்களுக்கும் நமது சங்கம் பாதுகாவலனாய் இருந்துள்ளது என்பதில் சாதனைகள் புரிவதில்
சளைக்காத சங்கம் நம் சங்கம் என்று பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
DADWO அலுவலகத்தில் கல்வி உதவித்தொகை
வழங்கும் பிரிவில் உதவிக்குப் பணிபுரிய ஆகாசம்பட்டி பள்ளி ஆசிரியை திருமதி புனிதா, இடையன்குளம் பள்ளி ஆசிரியர் திரு செல்வக்குமார்,
இலட்சுமியாபுரம் பள்ளி ஆசிரியர் திரு கிஷோர்குமார் ஆகிய ஆசிரியர்களை நியமித்ததை சங்கத்தின்
சார்பாக அதிருப்தியோடு அலுவலர்க்கு உணர்த்தியதன் விளைவாக ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிகளிலேயே
பணிபுரிய இச்சங்கம் உறுதுணையாக இருந்து வந்துள்ளது.
15.11.2012
அன்று
மல்லாங்கிணறு மாணவியர் விடுதிக் காப்பாளினி கூட்டுறவு பண்டகசாலை சென்ற நிலையில் DADWO திடீர்த்தணிக்கை செய்தபோது
அலுவலர் அவர்கள் இருக்கும் போதே ஈப்பு ஓட்டுநர் திரு கனகராஜ் சமையர்களிடம் “நோட்ட எடுத்துட்டு
வா” “உங்க “டீச்சர எங்க..டெய்லி இப்படித்தான் சீக்கிரமே வீட்டுக்குப் போயிருவாங்களோ”
என்று அவரே DADWO போலச் செயல்பட்ட விதத்தினை 16.11.2012 அன்று மாவட்ட ஆட்சியருடனான
பேச்சு வார்த்தையின் போது DADWO முன்னிலையிலேயே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்ததன் காரணமாக “ஈப்பு
ஓட்டுநர் விடுதிக்கு உள்ளே வரக்கூடாது” என்ற ஆட்சியரின் வாய்மொழி உத்தரவின் காரணமாக
அதன் பின்னர் நடைபெற்ற விடுதிதணிக்கைகளின் போது ஈப்பு ஓட்டுநர் விடுதிக்கு உள்ளே வராமல்
இருப்பதற்குச் சங்கம் காரணமாக அமைந்துள்ளது.
திருச்சுழி வட்ட விடுதிகளுக்கு மண்டல அலுவலராகச்
செயல்படும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க அலுவலர் வாரந்தோறும் கூட்டும் அனைத்து விடுதிக்
காப்பாளர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் ‘’காப்பாளர் காப்பாளினிகளை ஒருமையில் பேசுகிறார்”
“டாய்லெட்ட சுத்தமா வச்சுட்டு SMS அனுப்பச் சொல்கிறார்” “எந்த விளக்கமும் கேட்கவோ கொடுக்கவோ விடாமல்
காப்பாளர் காப்பாளினிகளை அடிமைகளைப் போன்று நடத்துகிறார்” என்று பல்வேறு குற்றச்சாட்டுகள்
வரப்பெற்றதைத் தொடர்ந்து அந்த அலுவலரை பெரும்பான்மையான இயக்க உறுப்பினர்களின் ஆதரவோடு
சென்று அவரை மன்னிப்பு கேட்க வைத்ததோடு “என்னய ரோட்டுல வச்சு கல்லால அடிங்க’’ “மண்டல அலுவலர் பொறுப்பிலிருந்து நான் ரிலீவ் ஆகிக்
கொள்கிறேன்” என்று அலுவலர் வாயலயே அவரைச் சொல்ல வைத்தது நமது சங்கத்தை மற்ற சங்க உறுப்பினர்களும்
வேறு துறை சார்ந்த சங்கங்களும் பொறாமையோடு பார்க்கும் அளவுக்கு நமது வளர்ச்சி இருக்கிறது
என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
மாநிலச் சங்கத்திற்கு
நமது மாவட்டம் கொடுத்த கொடை மாநில அமைப்புச் செயலாளர் திரு பொ.சிவக்குமார் அவர்கள்
தன்னலம் கருதாது நாமெல்லாம் நமது உறுப்பினர் திரு கருப்பசாமியின் கல்யாணத்தில் விருந்துண்டு
களைத்திருந்த 23.11.2012 அன்று மாநிலத் தலைவர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளோடு
சென்னையில் நடைபெற்ற ஆணையர் அவர்களுடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு நமது மாவட்டத்தின்
பங்களிப்பைச் சிறப்பாகச் செய்து முடித்தார் என்பதனைச் சங்கம் பெருமிதத்துடன் நினைவு
கூர்கிறது.
தீபாவளிக் கோலாகலங்கள் கொடிகட்டிப் பறந்த
12.11.2012
அன்றைய
நிலையில் நமது சங்க மகளிர் அணிச் செயலாளரும் சுந்தரராசபுரம் விடுதிக்காப்பாளினியுமான
திருமதி அ.செல்லம்மாள் அவர்களின் வீடு கிரகப்பிரவேசத்துக்குக் கடுமையான வேலைப் பழுவிற்கு
இடையிலேயும் நமது சங்க மாநிலத்தலைவர் திரு கோ.பாக்கியராஜ் அவர்கள் வந்து சிறப்புச்
சேர்த்தார்.அன்னாரை நமது சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் திரளாகவும் மலர்ந்த
முகத்துடனும் வரவேற்று உபசரித்து சிறந்த பரிசுடனும் சிவந்த முகத்துடனும் வழியனுப்பி
வைத்தோம் என்பது நாம் உறவாக இருக்கும் சங்கம் என்பதற்கு உதாரணமாக இருந்த நிகழ்வினைப்
பகிர்ந்து கொள்வதில் பரவசம் அடைகிறோம்..!
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வார்டனா…ஓ வாடனா… வாத்தியாரா…என்னது
ADW டிபார்ட்மென்டா…ஓ வெல்பேரா…அதாங்க எஸ்சி டிபார்ட்மென்டு…உங்காஸ்டல்ல தாதாதாதாதாதாதாசில்தாதாதாதாதாரு
விசிட்டா…அய்யய்யோ கல்க்க்டரு ராசபாளயம் வாராராம்லெ…….
என்ற நிலை மாறி………
மாமா கலெக்டர பாத்து ஒரு
வாரம் ஆச்சு
மாமா..நாளைக்கு பார்த்துருவோமா மாமா.. அண்ணே ஆபிசரு போற ரூட்டு சரி இல்லணே…உண்ணாவிரதம்
உக்காந்துருவமாணே..சித்தப்பு எதுக்கு சித்தப்பு நமக்கு இந்த காசு…பாத்துக்கலாம் சித்தப்பு
கரெக்க்டா இருப்போம் சித்தப்பு…எவனும் ஒரு ம…ம் புடுங்க முடியாது… அண்ணே..தங்கச்சி
அக்கோய்..மதினி…சிஸ்டர்.. பங்காளி ,சம்பந்தி, பிரதர்ர்ர்ர்….மச்சான்…தம்பி..
என்ற நிலை தொடரும் நிலையில்….
மாற்றம் ஒன்றே மாறாத இவ்வுலகில்…….ஓகே
ஓகே நிறுத்திக்கிறேன்.. அதே பழய பழமொழி தாங்க..ஒன்று பட்டால் உண்டு வாழ்வு…நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே..ஓகே..பீ ஃகேர்புல்..(என்னச் சொன்னேன்:-)))))))))))))))))))
மாவட்டத்தலைவர் மாவட்டச்செயலாளர் மாவட்டப்
பொருளாளர்
No comments:
Post a Comment