By dn, விருத்தாசலம்
First Published : 21 October 2012 10:45 AM IST
எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் சார்பில் கலைகளும் சமூகமும் எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்செல்வன் நூலை வெளியிட விஜய் தொலைக்காட்சி "நீயா நானா' நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணிராஜ், எவிடன்ஸ் நிர்வாக இயக்குநர் கதிர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
நூலை வெளியிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: பெத்தவன் எனும் இந்த நூலை மிகக் குறைந்த விலைக்கு அச்சடித்து தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். "கலைகளும் -சமூகமும்' எனும் அடிப்படையில் கல்வி, குடும்பம், மதம், ஊடகம், ஜாதி உள்ளிட்ட தலைப்புகளில் பண்பாட்டுத் தளம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இமயம் வரவேற்றார். அரசு ஆதிதிராவிடர் நல ஆசிரியர் காப்பாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் தலைமை ஏற்றார். திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிஞர் கரிகாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு ஜீவானந்தம், சங்க மாவட்டத் தலைவர் ஜீவகாருண்யன், ஆசிரியர் வே.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் ரத்தின.புகழேந்தி, அமிர்தராசு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட பொருளர் மாய.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment