TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Sunday, April 22, 2012

சூதாட்டமல்ல, இது வாழ்க்கை! உரத்த சிந்தனை, மனுஷ்ய புத்திரன்




கடந்த வாரமும், ஒரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துக் கொண்டிருக்கிறார். மாணவர்களின் இந்த தற்கொலைச் செய்திகளை படிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், சட்டென, நம் பிள்ளைகள் யாரோ ஒருவரின் முகம் நினைவுக்கு வந்து விடுகிறது. அந்தப் பிள்ளைகளின் மனதில் என்ன இருக்கிறது என்ற பதட்டம் வந்து விடுகிறது. நாம் அவர்களை சரியாகத் தான் கவனித்துக்கொள்கிறோமா என, நாம் நிம்மதியிழந்து தவிக்கத் துவங்கிவிடுகிறோம்.


உண்மையில் இன்றைய இளைஞர்களைப் புரிந்துக்கொள்வது, அத்தனை எளிதானதா? இந்த தற்கொலைகள் நமக்குச் சொல்லும் செய்தியை, நாம் சரியாகப் புரிந்துக்கொள்கிறோமா? வாழ்க்கையை வாழத் துவங்கும்போதே, அதை முடித்துக் கொள்ளும் இந்தத் துயரம், மனம் கசியச் செய்வதாக இருக்கிறது. மரணத்தை முத்தமிட்ட அந்த களங்கமற்ற முகங்களை புகைப்படங்களில் பார்க்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வாழ்வின் எந்த துயரம், வாழ்வின் எந்த அவலம் அவர்களை இந்த முடிவை நோக்கித் துரத்தியது என்ற கேள்வி அலைக்கழிக்கிறது. ஒரு இளைஞனின் தற்கொலை என்பது, ஒரு தனிமனிதனின் அழிவு மட்டுமல்ல; அது ஒரு குடும்பத்தின் அழிவு; ஒரு தலைமுறையின் அழிவு; ஒரு தேசத்தின், ஒரு சமூகத்தின் எதிர்கால நம்பிக்கையின் அழிவு. அவர்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியதில் அல்லது அவர்களை அந்த முடிவிலிருந்து தடுக்கத் தவறியதில் நாம் எல்லாருக்கும், எங்கோ ஒரு மறைமுகமாக சிறிய பங்காவது, இருக்கத்தான் செய்கிறது. இந்த சமூகம், நமது இளைஞர்களுக்கு எதைத் தான் கற்பிக்கிறது? நமது கல்வி அமைப்புகள், அவர்களுக்கு எதைப் புரிந்து கொள்ள வைத்திருக்கிறது?


ஒரு மாணவரின் தற்கொலைக்கு, கல்விச் சூழல், குடும்பம், பொருளாதார நிலை, தனிப்பட்ட உறவுகள் என, நான்கு முக்கியக் காரணிகள் தூண்டுதலாக இருக்க முடியும். பல்வேறு சமூக பொருளாதார மாற்றங்களால், இன்று கல்வி பரவலாக்கப்பட்டு, சமூகத்தின் எல்லா மட்டங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி ஏராளமானோர் வருகின்றனர். கற்பதற்கும் தடையாக இருந்த பொருளாதார, ஜாதியத் தடைகள் தகர்த்து எறியப்பட்டு விட்டன. ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்தும், பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பங்களிலிருந்தும், உயர் கல்வியை நோக்கி வரும் மாணவர்கள், நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுடன், பல்வேறு அடையாள சிக்கல்களைச் சந்திக்கின்றனர். ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் சமூக ஏற்றத்தாழ்வு மனப்பான்மைகள், ஆங்கிலம், நவ நாகரிக வாழ்க்கை முறை என, பல சிக்கல்களை கிராமப்புற மாணவர்கள் சந்திக்கின்றனர். இது அவர்களுக்கு, தாழ்வுணர்ச்சியையும், தனிமையுணர்ச்சியையும் கொண்டு வருகிறது.


இன்று உயர் கல்விக்கான செலவுகள், கடுமையாக அதிகரித்து விட்டன. பல குடும்பங்கள் குழந்தைகளின் கல்விக்காக, தங்களிடமிருக்கும் எல்லா நிதி ஆதாரங்களையும் பணயம் வைக்கின்றன. கடன்கள், எஞ்சியிருக்கும் சேமிப்புகள், சொத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தியே பெரும்பாலான குடும்பங்களில், இன்று ஒரு மாணவனோ, மாணவியோ உயர் கல்விக்குச் செல்ல முடிகிறது. கல்விக் கட்டணங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் தனிப்பட்ட செலவுகளும், இன்று பன்மடங்கு அதிகரித்துவிட்டன. ஒரு குடும்பம், அதையும் தாங்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு, பெரும் பொருட்செலவில் ஆடப்படும், ஒரு சூதாட்டம் போல மாறிவிட்ட கல்வி அமைப்பில், மாணவர்கள் கடும் மன நெருக்கலுக்கு ஆளாகின்றனர். இன்னொரு புறம், கடுமையான பாடச் சுமை, போட்டி போட வேண்டிய நிர்பந்தம், போட்டியில் தோல்வியடைந்தால் தன் மீது, கட்டப்பட்ட மொத்த நம்பிக்கையும், சிதற வேண்டிய சூழல். இது, மாணவர்களை விபரீத முடிவுகளை நோக்கித் தள்ளுகிறது.


அடுத்ததாக, இன்றைய இளைஞர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் புதிய சுதந்திரங்களும், வாய்ப்புகளும், தேவைகளும் அவர்களை நிலைகுலைய வைக்கின்றன. பொறுப்புகளையும், கடமைகளையும் விட, கேளிக்கைகள், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை பெருமளவு சூழ்ந்து கொண்டிருக்கின்றன. இணையம், அலைபேசி வழியாக, உறவுகளில் பல புதிய சாத்தியங்கள் இன்று உருவாகி இருக்கின்றன. போதை பொருள்களை பயன்படுத்துவது, இரவு நடனங்களுக்குச் செல்வது, சிறு, சிறு, வன்முறைகளில் ஈடுபடுவது என, பல வழிகளில் இன்று இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை கொண்டாட விரும்புகின்றனர். இன்னொரு புறம், நவநாகரிக உடைகள், விதவிதமான எலக்ட்ரானிக் சாதனங்கள், உயர்தர உணவகங்கள் என, எண்ணற்ற தூண்டில்கள் இளைஞர்களை சுண்டி இழுக்கின்றன. பெரும் ஷாப்பிங் மால்களில் எதையும் வாங்காமல், எண்ணற்ற பொருள்களை உற்றுப் பார்த்தபடி நகரும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்களை பார்க்கும்போதெல்லாம், அவர்களின் வேட்கையை எளிதாக புரிந்துக் கொள்ள முடியும். இவ்வாறு, ஆண், பெண் உறவுச் சிக்கல்கள் காரணமாகவோ, வேறு தேவைகள் காரணமாகவோ, ஏதேனுமொரு நெருக்கடியில் மாட்டிக் கொள்ளும் மாணவர்கள், அதிலிருந்து வெளியேற முடியாமல் தற்கொலையின் வழியே தப்பிக்க முயற்சிக்கின்றனர்.


காரணங்கள் எதுவாக இருந்தாலும், நாம் நம் இளைஞர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் சவாலில் இப்போது இருக்கிறோம். பெற்றோர், தங்கள் குழந்தைகளை பந்தயக் குதிரைகளாக மாற்றும் எண்ணத்தை முதலில் நிறுத்த வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு எது சாத்தியமோ, அதை அவர்கள் இயல்பாக அடைய அனுமதிக்க வேண்டும். அவர்கள் தோல்வியடையும் போது, அந்த தோல்விக்கு அப்பாலும், ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதில் அடைவதற்கு எவ்வளவோ இருக்கின்றன என்பதை, ஒவ்வொரு கட்டத்திலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். தங்களால் அடைய முடியாததை எல்லாம், தங்கள் பிள்ளைகள் வழியே அடைய வேண்டும் என்று நினைப்பது, மிகவும் இழிவான சுயநலம் அல்லவா? மேலும், இன்றைய இளைஞர்களின் ஆசாபாசங்களை பெருந்தன்மையுடனும், அறிவுணர்ச்சியுடனும் புரிந்துக்கொள்ள முன் வரவேண்டும். தங்களது போலி ஒழுக்க மதிப்பீடுகளால், அவர்களை அச்சுறுத்துவதால், எந்த பயனும் இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் தங்களை மீட்டுக் கொள்ள பெற்றோர் உதவ முடியும். இதில், ஆசிரியர்களின் பங்கு மிகவும் மகத்தானது. தங்கள் முன் அமர்ந்திருக்கும் இளைஞனின் மூளைகளை மட்டுமல்ல, இதயங்களைத் தொட அவர்கள் முயற்சிக்க வேண்டும். இளைஞர்களின் இதயத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துவது மிகவும் சுலபம். இந்த வாழ்க்கையை எந்த சூழலிலும் எதிர்க்கொள்வதற்கான புரிதலையும், மனோதிடத்தையும் அவர்கள், மாணவர்களிடம் ஏற்படுத்த முடியும்.


எந்தத் தோல்விக்கும், ஆசாபாசத்திற்கும் இடையிலும் வாழ்வின் மகத்துவத்தை, அவர்கள் மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். அத்தகைய ஒரு மகத்தான பணியை இன்று, எந்த ஆசிரியர் செய்கிறாரோ, அவர் கடவுளுக்கு நிகரானவர். இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சொல்ல ஒன்று இருக்கிறது. நீங்கள் தான் இந்த உலகின் அச்சு. நீங்கள் தான் இந்த வாழ்க்கையின் மையம். பணம், உறவு முறிவுகள், தோல்விகள் எல்லாமே, வாழ்க்கையில் வரும் சிறு இடைவேளைகள். இடைவேளைக்குப் பிறகே, உங்கள் வாழ்க்கையின் மகத்தான திருப்பங்கள் காத்திருக்கின்றன. நீங்கள் இன்று ஏதோ ஒன்றில் தோல்வியடைவது, இதைவிட மகத்தான ஒன்றை அடைவதற்கே! நீங்கள் மலை மீது எரிய வேண்டிய பெரு நெருப்பு; மின்மினிகள் போல மறையலாமா? 


email: manushyaputhiran@gmail.com


- மனுஷ்ய புத்திரன், பத்திரிகையாளர், சிந்தனையாளர்




Thursday, April 19, 2012

தமிழகத்தில் பாலிடெக்னிக்- இன்ஜி.,உள்பட 20 கல்லூரிகள் திறக்க முடிவு; ஜெ., அறிவிப்பு



சென்னை: 
தமிழகத்தின் பல இடங்களில் பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குள் துவங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது: பள்ளிப் படிப்பை நிறைவுசெய்யும் கிராமப்புற மாணவர்கள், வெளியூர் சென்று உயர்கல்வி(கல்லூரிப் படிப்பு) கற்பதில் பலவித சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எனவே, அவர்களில் பலர் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொள்கின்றனர். இந்த நிலையை மாற்றும் வண்ணம், இந்த அரசு பொறியியல், மருத்துவம், கலை-அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் துவக்கி வருகிறது.
கடந்த 2011-12 கல்வியாண்டில், மொத்தம் 11 பல்கலைக்கழக உறுப்பு கலை-அறிவியல் கல்லூரிகள் துவக்கப்பட்டன. தேனி மாவட்டம் போடியில், ஒரு அரசு பொறியியல் கல்லூரி துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சட்டசபையில் ஜெ., இது தொடர்பான அறிவிப்பில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் மொத்தம் 20 கல்லூரிகள நடப்பு கல்வியாண்டில் திறக்கப்படவிருக்கிறது

 அரசு பொறியியல் கல்லூரிகள்:

1. தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி
2.தஞ்சை வட்டம் செங்கிப்பட்டி

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்

1.திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம்
2.புதுகை மாவட்டம் கந்தர்வக்கோட்டை
3. விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்
4.ஈரோடு மாவட்டம் பெருந்துறை
5.கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை
6.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 
7.அரியலூர் 
ஆண்-பெண் இருபாலரும் படிக்கக்கூடிய, பல்கலைக்கழக உறுப்பு கலைக்கல்லூரிகள் 
1. கன்னியாகுமரி
2.திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர்
3.சேலம் மாவட்டம் எடப்பாடி
4.பரமக்குடி, 
5.நெல்லை மாவட்டம் கடையநல்லூர்
6. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி
7.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை
8.மதுரை மாவட்டம் திருமங்கலம்
9.சென்னை அருகே 
அரக்கோணம் 

10.சென்னை அருகே திருவொற்றியூர்
11. நாகப்பட்டிணம் 

இத்தகவலை, இச்சபையில் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

தலையங்கம்: ஒரு சோறு பதம்

தமிழ்நாட்டில் கல்வித்துறை எந்த அளவுக்குச் சீர்கேடு அடைந்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள திருவண்ணாமலையில் ஒரு தனியார் பள்ளியில் எஸ்எஸ்எல்சி தேர்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையும் அதில் கிடைத்துள்ள சான்றுகளுமே போதுமானவை. ஒரு தனியார் பள்ளியில், பொதுத் தேர்வில் பலரும் முறைகேடாகத் தேர்வு எழுதி வருவதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ராவுக்கு மின்அஞ்சல் வந்ததையடுத்து, அவர் திடீர் ஆய்வு நடத்தியதில் கிடைத்த சான்றுகள் அதிர்ச்சி தருபவை.

 கணிதத் தேர்வு வினாக்களுக்கான விடைகளை அலுவலகத்தில் ஜெராக்ஸ் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். 20 பிரதிகளை ஆட்சியர் கைப்பற்றுகிறார்.
 8 தேர்வு அறைகளின் கண்காணிப்பாளர்களிடம் கணித வினாக்களுக்குரிய விடைகளின் துண்டுத்தாள் (பிட்) இருக்கிறது. எப்படி வந்தது? பதில் இல்லை. எந்த மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்தீர்கள்? பதில் இல்லை.
 8 ஆசிரிய-ஆசிரியைகளின் செல்போன்களிலும் தேர்வு நேரத்தில் ஏராளமான அழைப்புகள் பதிவாகியிருந்தன.
 ஓர் ஆசிரியரின் சட்டைப்பையில் மாணவரின் பெயர், தேர்வு எண், ரூ.200 பணம் இருந்துள்ளது.
 அதிர்ச்சி அளிக்கும் இந்தச் சம்பவத்தில் இந்தத் தனியார் பள்ளிக்குத் துணை போய் இருப்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்!
 இத்தகைய முறைகேடுகள் முதலில் அரசுப் பள்ளிகளில்தான் மிகச் சிறிய அளவில், யாருக்கும் பாதிப்பில்லை என்ற அளவில் தொடங்கின. கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வகுப்புக்கே வராமலும், (எஸ்எம்எஸ் வருகைப் பதிவு என்பது இன்னொரு மோசடி) பாடம் நடத்தாமலும், பேருந்து நேரத்துக்கு ஏற்ப வகுப்புகளை ஆசிரியர்கள் "கட்' அடித்துவிட்டுப் போவதும் நடந்துகொண்டிருக்கின்றன.
 கற்பித்தல் பணியில் ஆசிரியர்களின் உழைப்பு இல்லாவிட்டால், மாணவர்கள் மட்டும் எப்படி மதிப்பெண் பெற முடியும்? மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், எந்தப் பாடத்தில் தேர்ச்சி குறைந்துள்ளதோ அந்த ஆசிரியருக்கு இடமாற்றம் வரும். ஆகவே, ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான விடைகளை மட்டும் ஆசிரியர்களே சொல்லிக் கொடுத்துவிடுவது வழக்கமாக இருந்தது. இந்த விடைகளில்கூட எது சரி என்று தெரியாமல், செல்போன் மூலமாக வேறொரு ஊரில் தேர்வு அறையில் உள்ள ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து, சொல்லும் வழக்கமும் இங்கேதான் தொடங்கியது.
 செல்போனில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே விடை கேட்டு வாங்கி, மாணவர்கள் 40 விழுக்காடு பெற்று தேர்ச்சி பெறச் செய்வதால், இவர்கள் சிறந்த மாணவர்களுக்குப் போட்டியே இல்லை என்பதால், இதனை மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தங்களுக்குத் தெரிந்திருந்தாலும் அவற்றைக் கண்டும் காணாமல் இருந்தார்கள். இத்தகைய முறைகேடுகள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் நடத்தும் தனியார் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே நடக்கத் தொடங்கிவிட்டன.
 பிளஸ்-2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளிலும் இதே முறைகேடுகள்தான். கண்காணிப்பாளருக்கு பிரியாணி மற்றும் கவர் உண்டு. இதில் தனியார் பள்ளிகளில் சிறப்பாகக் கவனித்தால், அரசுப் பள்ளிகளில் அதன் தரத்துக்கேற்ப கவனிக்கிறார்கள்.
எங்கே நேர்மையும் ஒழுக்கமும் கற்றுத் தரப்பட வேண்டுமோ, அங்கே ஊழலும் முறைகேடுகளும் அரங்கேற்றப்பட்டன.

 வேதியியல் செய்முறைத் தேர்வில், பாக்கெட்டைத் திறந்தால் ஆய்வு செய்ய வேண்டிய உப்பின் பெயர் எழுதியிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். எல்லா மாணவர்களுக்கும் செய்முறைத் தேர்வில் 40-க்கு மேல்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாகச் செயல்படுகிறார்கள். தனியார் பள்ளிகளில் 50-க்கு 50 கொடுத்து, எழுத்துத் தேர்வில் இன்னும் கூடுதல் மதிப்பெண் காட்டப் பார்க்கிறார்கள்.
 இதிலும்கூட, ""மாணவர்கள் பாவம், இதில் மதிப்பெண் வாங்கியாகிலும், எழுத்துத்தேர்வில் குறையும் மதிப்பெண்ணை ஈடுசெய்துகொள்ளட்டும்'' என்று கல்வி அதிகாரிகளும் இரக்கம் காட்டுகிறார்கள். இதிலெல்லாமா கருணை காட்டுவது? பிறகு கல்வியின் தரத்தைப் பற்றி பேச முடியுமா?
 இப்போது மாணவர்கள் தேர்ச்சி மட்டுமே பள்ளிகளின் குறிக்கோளாக இல்லை. 100 விழுக்காடு பெற்று, தலைசிறந்த பள்ளி என்பதைக் காட்டிக் கொள்வதற்கான முறைகேடாக இது தனியார் பள்ளிகளில் நுழைந்திருக்கிறது. காரணம் என்ன? தங்கள் புகழைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும், கணிதப் பாடத்தில் தமிழக மாணவர்கள் அனைவரும் திணறியபோது எங்கள் பள்ளி மாணவர்கள் 100-க்கு 100 வாங்கிவிட்டார்கள் என்று பெருமை பேச வேண்டும். அதற்காக எந்தவித முறைகேடுக்கும் தனியார் பள்ளிகள் தயாராகிவிட்டன. கல்விக் கட்டணத்தை மிக மிக அதிகமாக உயர்த்தவும் அதை நியாயப்படுத்தவும் இவை அவர்களுக்குத் தேவையாக இருக்கின்றன.
 அப்படியானால், உண்மையாகவே படித்து தேர்வு எழுதும் மாணவர்கள் கணிதத் தேர்வில் 100 மதிப்பெண் பெறமுடியாதவர்களாக இருக்க, யார், யாரோ 100 விழுக்காடு மதிப்பெண் பெறுவார்கள். இது எத்தகைய கீழ்த்தரமானது என்பதைக் கல்வி நிறுவனங்களோ அல்லது கல்வித் துறையோ சிந்திக்கவே இல்லை.
 இவர்களது வியாபாரப் போட்டியில் இவர்களது பந்தயக் குதிரை வெற்றி பெற எந்த முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள். இதற்கு கல்வித் துறை அதிகாரிகளின் அலட்சியமும், அரசியல்வாதிகளின் ஆதரவும்தான் காரணம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
 இந்த முறைகேட்டுக்குத் துணைபோயிருக்கும் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இவர்களுக்காக ஆசிரியர் உலகம் போராடும் என்பதுதான் அதைவிடக் கேவலமான அவலம். ஆசிரியர் தொழிலுக்கே இழுக்குத் தேடித் தந்திருப்பவர்களைத் தங்களது சக ஆசிரியர்கள் என்று சகதாபத்துடன் பார்ப்பவர்கள்தான் அதனினும் இழிந்தவர்கள் என்று யார் அவர்களுக்குப் புத்தி புகட்டுவது?
 ஆசிரியர்களும் அவர்களது குடும்பங்களும் தமிழ்ச் சமூகத்தின் அங்கமல்லாமல் போய் விடுவார்களா? இப்படியே போனால், தமிழ்ச் சமூகம் என்ன ஆகும்? வினை விதைத்தவன் வினை அறுப்பான், வேறென்ன?

Wednesday, April 18, 2012

14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு!

 தமிழகத்தில் தொடக்க பள்ளி, இடைநிலை பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 14 ஆயிரத்து 349 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவபதி கூறினார். சட்டசபையில் இன்று நடந்த பள்ளி கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது அவர் மேலும் கூறியதாவது: 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 900 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். 22 ஆயிரத்து 400 மாணவ மாணவிகளுக்கு 320 பள்ளிகளில் ஒன்று மற்றும் 6ம் வகுப்பு வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வி கற்பிக்கப்படும் என்றார். மேலும் அவர்,
எட்டு மாவட்டங்களில் மாணவ மாணவிகள் பள்ளிக்கு சென்று போக்குவரத்துவசதி செய்து தரப்படும். நூலகங்கள் மேம்படுத்தப்படும் என்றார்.