TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Wednesday, April 18, 2012

1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய வல்லுனர் குழு அமைப்பு!

சட்டசபையில் பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்கக் குறிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் என்.ஆர். சிவபதி தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களின் கல்வி தரத்தை தேசிய- உலகளாவிய அளவில் உயர்த்த கல்வி அமைச்சர் தலைமையில் 10 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இவர்கள் கீழ்க்கண்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குவார்கள்.


கல்வி தரத்தை உயர்த்த 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் மாற்றங்களை பரிந்துரை செய்தல், தற்போதுள்ள பாட நூல்களின் குறைகளை கண்டறிந்து தேவையான மாற்றங்களை கொண்டு வருதல், தரமான கல்வி வழங்க கட்டிட வசதி, இருக்கை வசதி, உபகரணங்கள் ஆகிய வசதிகளை பரிந்துரைத்தல் உள்பட தேவைப்படும் முக்கியமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அதே போல மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த 4,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், 17,380 பட்டதாரி ஆசிரியர்கள், 865 சிறப்பு ஆசிரியர்கள், 25 வேளாண் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் அரசு அனுமதி அளித்துள்ளது என்றார்.

Monday, April 16, 2012

அரசுப் பள்ளிகளுக்கு 29 முதல் கோடை விடுமுறை.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று மற்ற வகுப்புகளுக்கும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறுகின்றன. கடைசி தேர்வு வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, ஏப்ரல் 29-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
சில மாவட்டங்களில் இயற்கை இடர்பாடுகள், உள்ளூர் திருவிழாக்கள் காரணமாக 220 வேலை நாள்களை நிறைவு செய்யாத பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படாத நிலையில், இதே கால அளவில் ஓரிரு நாள்களில் விடுமுறை அறிவிக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Sunday, April 15, 2012

காலி மற்றும் உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடத்தினை பட்டதாரி பணியிடமாக மாற்றி நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்குதல்


பட்டதாரி ஆசிரியர் கூடுதலாக தேவையுள்ள பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வழங்கும் பொருட்டு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட நடுநிலைப்பள்ளிகளின் சார்பான ஆசிரியர் மாணவர் நிர்ணய அறிக்கையின்படி கண்டறியப்பட்ட காலி உபரி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை அரசானை நிலை எண் . 100 பள்ளிக்கல்வித் துறை நாள். 27.06.2003 ன் படி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தப்பட்டு இயக்குனரின் தொகுப்பிற்கு கொண்டுவரப்பட்டு கூடுதல் தேவையுள்ள நடுநிலைப்பள்ளிகளுக்கு பகிர்வு செய்யப்பட்டு ஆணை வழங்கப்படுகிறது.
 
தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 00307 / இ 1 / 2011, நாள். 12.01.2012