சென்னை: தமிழகத்தில் புதியதாக 25 ஆதிதிராவிடர் நல விடுதிகள் அமைக்கப்பட
உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணி சட்டபேரவையில் அறிவித்தார். ஆதிதிராவிட
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இதனை அறித்தார். மேலும் ஆதிதிராவிடர்
நலத் துறை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும்
பன்னிரென்டாம் வகுப்பு தேர்வுகளில் முதலிடம் பெறுவோருக்கு தலா ரு.10,000
ரொக்கம் ஊக்கப் பரிசாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் சுப்பிரமணி
அறிவித்தார். ஆட்சி பணித்தேர்வு எழுதும் மாணவருக்கு ஊக்கத் தொகை
ரூ.50,000ஆக உயர்தப்படுகிறது என்றும் அமைச்சர் அறிவித்தார்
No comments:
Post a Comment