TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Saturday, April 13, 2013

பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவி உயர்வுகலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓராண்டு கூடுதல் டிகிரிக்கு அங்கீகாரம் மறுத்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "உயர்நீதிமன்ற பெஞ்ச்' தடை விதித்தற்கான காரணங்கள்

கூடுதல் டிகிரியை (ஓராண்டு பட்டப் படிப்பு), மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது; பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இதை அங்கீகரிக்கக் கூடாது' என, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, சென்னை ஐகோர்ட், "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. மூன்றாண்டு பட்டப் படிப்புகள் தவிர, கூடுதல் டிகிரி என, ஓராண்டு பட்டப் படிப்பை, பல்கலைகழகங்கள் நடத்துகிறது. கூடுதல் டிகிரி படிப்பில் சேர வேண்டும் என்றால், பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி நியமனம், பதவி உயர்வு பெறுவதற்காக, கூடுதல் டிகிரியை படிக்கின்றனர். இதையடுத்து, "பல்கலைக் கழகங்கள் நடத்தும், கூடுதல் டிகிரியை, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும் அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த ஐகோர்ட், "ஓராண்டு படிப்பு மூலம் பெறும், கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு படிப்பு மூலம் பெறும் பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது.
எனவே, பணி நியமனத்துக்கும், பதவி உயர்வுக்கும், இந்த ஓராண்டு பட்டப் படிப்பை, அங்கீகரிக்கக் கூடாது' என, உத்தரவிட்டது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த, பிரேமகுமாரி என்பவர் உள்ளிட்ட, இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த, அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: தனி நீதிபதி பின்பற்றியுள்ள, பல்கலைக்கழக மான்யக் குழு விதிமுறைகள், 1985ம் ஆண்டு, கொண்டு வரப்பட்டது. அந்த விதிமுறைகள், 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் மூலம், ரத்து செய்யப்பட்டு விட்டது. "யு.ஜி.சி., விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாக கருதி, கூடுதல் டிகிரியை, மூன்றாண்டு பட்டப் படிப்புக்கு இணையாக கருத முடியாது' என, நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓராண்டு படிப்பின் மூலம், கூடுதல் டிகிரி பெறுவதை, யு.ஜி.சி., அறிமுகப்படுத்தி உள்ளது. யு.ஜி.சி.,யே இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் போது, ஐகோர்ட் உத்தரவானது, யு.ஜி.சி.,யின் கொள்கைக்கு எதிராக உள்ளது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் கூடுதல் டிகிரியை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் அங்கீகரித்துள்ளது. மூன்றாண்டு பட்டப் படிப்பு முடித்தவர்கள் தான், கூடுதல் டிகிரி படிப்பில் சேர, தகுதி உள்ளது. இதை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். அதுவரை, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனுவை, நீதிபதிகள் தர்மாராவ், விஜயராகவன் அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன் வாதாடினார். தனி நீதிபதியின் உத்தரவுக்கு, "டிவிஷன் பெஞ்ச்' தடை விதித்தது. அப்பீல் மனுவுக்குப் பதிலளிக்கும்படி, பள்ளி கல்வித் துறைக்கு, "நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது

Thursday, April 11, 2013

மாவட்டத்திற்குள் நடைபெறும் இடமாறுதல் விண்ணப்பப் படிவம்

ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு ஒரு கசப்பான செய்தி...


இந்த ஆண்டும் மாவட்டங்களுக்குள் நடைபெற வேண்டிய இட மாறுதல் கலந்தாய்வு சென்னையிலேயே நடைபெறும் என்பது ஏறக்குறைய முடிவாகி விட்டது......

அதற்கான விண்ணப்படிவங்களை ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்கள் 25.04.2013 க்குள் அந்தந்த மாவட்ட  ஆதிதிராவிடர் அலுவலகத்துக்கு சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் (அ) தனிவட்டாட்சியர்கள் மூலமாக அனுப்புமாறு இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவ்விண்ணப்பங்களை 03.05.13க்குள் இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்புமாறு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களை இயக்குனர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

 எழுத்துருக்கள் தெரிய தமிழ் ஃபான்ட் டவுன்லோடு செய்ய இங்கு க்ளிக்கவும் 

விண்ணப்த்தை திவிறக்க இந்லிங்க்கில் க்ளிக் செய்வும்...

மாவட்ட மாறுதல் விண்ணப்பப் படிவம்-2013




Wednesday, April 10, 2013

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன் களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில் உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013&14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஒரே நேரத்தில், இரண்டு வெவ்வேறு பட்டங்களைப் படித்த பெண்ணுக்கு, முதுகலை ஆசிரியர் பணி வழங்க மறுத்தது சரி தான்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.முதுநிலை ஆசிரியை (ஆங்கிலம்) பணிக்கு, ஜெகதீஸ்வரி என்பவர் விண்ணப்பித்து இருந்தார். இவர், 2001ம் ஆண்டு, பி.எஸ்சி., (இயற்பியல்), 2003ம் ஆண்டு எம்.ஏ., (ஆங்கிலம்), 2009-10ம் ஆண்டில், பி.எட்., படிப்பு, 2011ம் ஆண்டில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ., (ஆங்கிலம்) படித்தார்.பி.எட்., படிக்கும் போது, பி.ஏ., ஆங்கிலப் படிப்பும் படித்து, இரண்டு பட்டங்களை பெற்றுள்ளார். எனவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்களை பெற்றதால், சென்னை பல்கலைக்கு, இந்தப் பிரச்சனையை, ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது. ஒரே ஆண்டில், பி.எட்., மற்றும் பி.ஏ., பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அதற்கு பல்கலையின் அங்கீகாரம் இல்லை என, தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, "முதுநிலை ஆசிரியை பணிக்கு, ஜெகதீஸ்வரிக்கு தகுதியில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஜெகதீஸ்வரி மனுத் தாக்கல் செய்தார். முதுநிலை ஆசிரியர் பணிக்கு தன்னைத் தேர்ந்தெடுத்து, நியமிக்க வேண்டும் என, கோரியிருந்தார்.இந்த மனுவை, நீதிபதி ராமசுப்ரமணியன் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், கூடுதல் அரசு பிளீடர் பி.எஸ்.சிவசண்முகசுந்தரம் ஆஜரானார். மனுவை விசாரித்த, நீதிபதி ராமசுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:வெவ்வேறு பணியிடங்களுக்கு, குறிப்பிட்ட தகுதி, தரத்தை நிர்ணயிக்க, பணி வழங்குபவருக்கு உரிமை உள்ளது. பல்கலைக்கழகங்கள், வெவ்வேறு விதமான படிப்புகளை, ஓட்டல்களில் வழங்கப்படும் "பப்பே' உணவு வகைகள் போல் வழங்குகிறது. இத்தகைய படிப்புகளுக்கு, பல்கலைக்கழகங்கள் அங்கீகாரம் வழங்குகிறது. வரிசைப்படி தான் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.மதிய உணவின் போதோ, டின்னரின் போதோ, சில ஒழுங்குமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. உணவிற்கு முன், ஆரம்பமாக "ஜூஸ்' அல்லது "சூப்' சாப்பிடுகிறோம். பின், உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு, இறுதியில் பழங்கள் சாப்பிடுகிறோம். உணவு முறையில் பின்பற்றப்படும் நடைமுறைகளை, யாரும் கடைசியில் துவங்கி, முன் நோக்கி செல்வதில்லை.கல்வி துறையில், ஒருவர் விரும்பும் எந்தத் துறையிலும், வெவ்வேறு வகையான படிப்புகளை, அவர் விரும்பும் வரிசையில் படிக்க, பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கிறது. ஒரே நேரத்தில், 2 குதிரைகளில் சவாரி செய்ய அனுமதிக்கிறது. இதனால், கல்வியின் தரம் தான் பாதிக்கப்படுகிறது. இத்தகைய ஆசிரியர்களை நியமிக்க மாட்டோம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த முடிவை, அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது.ஒரு முடிவு தன்னிச்சையாக இருந்தாலோ, சட்ட விரோதமாக இருந்தாலோ, அரசியல் அமைப்பு உரிமையை மீறியதாக இருந்தாலோ ஒழிய, மனுதாரர் கோரியபடி, உத்தரவு பிறப்பிக்க முடியாது.எனவே, "ஒரே நேரத்தில் வெவ்வேறு பட்டப்படிப்புகளை படித்தவர்களின், விண்ணப்பங்களை ஏற்கக் கூடாது' என, ஆசிரியர் தேர்வு வாரியம் எடுத்த நிலைப்பாடு சரியானது தான். அதில், குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி ராமசுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவி உயர்வு கலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday, January 20, 2013

"பெத்தவன்' நூல் வெளியீட்டு விழா

First Published : 21 October 2012 10:45 AM IST
எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருமுதுகுன்றம் இலக்கிய வட்டம் சார்பில் கலைகளும் சமூகமும் எனும் தலைப்பில் ஆய்வரங்கம் நடைபெற்றது. இதில், எழுத்தாளர் இமயம் எழுதிய பெத்தவன் எனும் நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்செல்வன் நூலை வெளியிட விஜய் தொலைக்காட்சி "நீயா நானா' நிகழ்ச்சியின் இயக்குநர் அந்தோணிராஜ், எவிடன்ஸ் நிர்வாக இயக்குநர் கதிர் ஆகியோர் பெற்று கொண்டனர்.
நூலை வெளியிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலர் ச.தமிழ்ச்செல்வன் பேசியது: பெத்தவன் எனும் இந்த நூலை மிகக் குறைந்த விலைக்கு அச்சடித்து தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும். "கலைகளும் -சமூகமும்' எனும் அடிப்படையில் கல்வி, குடும்பம், மதம், ஊடகம், ஜாதி உள்ளிட்ட தலைப்புகளில் பண்பாட்டுத் தளம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், எழுத்தாளர் இமயம் வரவேற்றார். அரசு ஆதிதிராவிடர் நல ஆசிரியர் காப்பாளர் சங்க மாநிலத் தலைவர் கோ.பாக்கியராஜ் தலைமை ஏற்றார். திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் கவிஞர் கரிகாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு ஜீவானந்தம், சங்க மாவட்டத் தலைவர் ஜீவகாருண்யன், ஆசிரியர் வே.தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கவிஞர்கள் ரத்தின.புகழேந்தி, அமிர்தராசு, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட பொருளர் மாய.முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலர் த.சீ.இளந்திரையன் நன்றி கூறினார்.

Friday, January 18, 2013

முஸ்லிமாக மாறிய எஸ்.சி. பிரிவினரை பிற்பட்டோராகக் கருத வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு நீதிமன்றம் உத்தரவு


தாழ்த்தப்பட்டோராக இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பிற்பட்ட வகுப்பினராக (பி.சி. முஸ்லிம்) கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு,  சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், கூரியூர் உமர்நகர் முஸ்லிம் ஜமாஅத் செயலர் எம்.கே. முஜிபுர் ரகுமான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்து தாழ்த்தப்பட்ட வகுப்பில் (எஸ்.சி.) இருந்து, 30 ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிமாக மதம் மாறினோம். இருப்பினும், இதுவரை எங்களுக்குச் ஜாதிச் சான்றிதழ் வழங்கவில்லை. இதனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
முஸ்லிம் மதத்தினரையும், அதன் உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் பிற்பட்ட வகுப்பினர் என தமிழக அரசு வகைப்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், ராஜகம்பீரத்தைச் சேர்ந்த ராஜா முகமது என்பவர், அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியம் தேர்வை எழுதியிருந்தார். அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர். அவருக்கு தேர்வாணையம், உங்களை ஏன் பொதுப் பிரிவில் சேர்க்கக் கூடாது என கேட்டு கடிதம் அனுப்பியிருந்தது. இந்த நிலையில், அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அவரை பி.சி. (முஸ்லிம்) பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது.
ஆகவே, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்கள் குறித்து ஆய்வு செய்து, அவர்களுக்கு உரிய ஜாதி அந்தஸ்து வழங்க உத்தரவிட வேண்டும். மேலும்,  இடைக்கால உத்தரவாக மேற்குறிப்பிட்ட பிரிவினரை பி.சி. முஸ்லிமாகக் கருதி அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இம் மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா,  கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இம் மனு மீதான இறுதி விசாரணை முடியும் வரை, எஸ்.சி. வகுப்பில் இருந்து முஸ்லிமாக மதம் மாறியவர்களை பி.சி. முஸ்லிமாகக் கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு 25 புதிய விடுதிகள் ஜெயலலிதா உத்தரவு


சென்னை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ரூ.3 கோடியே 83 லட்சம் செலவில் புதிதாக 25 விடுதிகள் கட்டுவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள்
தமிழகத்தில் தற்பொழுது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1,277 ஆதிதிராவிடர் நல விடுதிகளும், 40 பழங்குடியினர் விடுதிகளும், 299 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குழந்தைகள் கல்வி கற்பதற்காக அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் பயனாக அதிக அளவில் மாணவ, மாணவியர் கல்வி கற்பதற்கு முன்வருவதாலும், இடைநிற்றல் கணிசமாக குறைந்துள்ளதாலும், மாணவ, மாணவியர் தங்கி பயிலுவதற்கு அதிக விடுதிகள் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
25 புதிய விடுதிகள்
2012–13–ம் நிதியாண்டில் 16 பள்ளி விடுதிகள், 8 கல்லூரி விடுதிகள், 1 ஐ.டி.ஐ விடுதியும் என மொத்தம் 25 புதிய விடுதிகள் தொடங்குவதற்கு முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எஸ். கொடிக்குளம், ராஜபாளையம், அரச்சநல்லூர், எஸ்.புங்கம்பாளையம், கருமந்தக்குடி, தேவக்கோட்டை, ஆத்தூர், தோப்பூர், நெய்கொப்பை, குமராட்சி, பெரியசாமிபுரம், கடம்பன்குளம், ஒஸ்.ஓகையூர், கல்லாக்கோட்டை, சுப்ரமணியபுரம், விராலிமலை, உதகமண்டலம், திருச்சி, உடுமலைப்பேட்டை, உளுந்தூர்பேட்டை, நன்னிலம், திருப்பத்தூர், அரக்கோணம், புதுக்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் பள்ளி, கல்லூரி விடுதிகள் தொடங்கப்படும். இதில் ஒரு விடுதிக்கு 50 மாணவ, மாணவியர் வீதம் 1,250 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு பயன் அடைவார்கள்.
75 பணியிடங்கள்
இந்த விடுதிகளை பராமரிக்க ஒரு விடுதிக்கு பட்டதாரி காப்பாளர், காப்பாளினி பணியிடம் 1, சமையலர் பணியிடம் 1, காவலர், ஏவலர் பணியிடம் 1 என 3 பணியிடங்கள் வீதம் 25 விடுதிகளுக்கு 75 பணியிடங்களை தோற்றுவிக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.புதிதாக தொடங்கப்பட உள்ள 25 விடுதிகளுக்கு அரசுக்கு தொடர் செலவினமாக ரூ.3 கோடியே 33 லட்சத்து 3 ஆயிரத்து 600–ம், தொடரா செலவினமாக ரூ.49 லட்சத்து 93 ஆயிரத்து 750–ம் என மொத்தம் ரூ.3 கோடியே 82 லட்சத்து 97 ஆயிரத்து 350 செலவு ஏற்படும்.
இரண்டு அடுக்கு கட்டில்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 68 கல்லூரி மாணவர் விடுதிகளில் 7,828 மாணவர்களும், 61 மாணவியர் விடுதிகளில் 4,738 மாணவியர்களும் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இம்மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன் பெறும் வகையில், அவர்களுக்கு இரண்டு அடுக்கு கட்டில்கள் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இதன்படி, 68 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 7,828 மாணவர்களுக்கு 3,932 கட்டில்களும், 61 கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள 4,588 மாணவியர்களுக்கு 2,313 கட்டில்களும் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடியே 28 லட்சத்து 1 ஆயிரத்து 475 நிதி ஒதுக்கீடு செய்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மின்னணு எடை இயந்திரம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் மற்றும் இதர பொருட்களை சரியாக அளக்க, அனைத்து விடுதிகளுக்கும், உண்டி உறைவிடப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் ரூ.5 ஆயிரம் விலையில் ஒரு மின்னணு எடை இயந்திரம் வழங்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதற்காக ரூ.80 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சுகாதார குட்டை தகளி
மேலும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 466 மாணவியர் விடுதிகள், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 மாணவியர் விடுதிகள், 100 நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகள் ஆக மொத்தம் 582 விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவியர்களின் உடல் நலத்தைப் பேணவும், விடுதியின் சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்கவும், ஒவ்வொரு விடுதிக்கும், உண்டி உறைவிடப் பள்ளிக்கும் ஒரு சுகாதார குட்டை தகளி (நாப்கின் இன்சினிரேட்டர்) வழங்கவும், அதற்காக ரூ.1 கோடியே 45 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Monday, January 7, 2013

பணி நியமனம், பதவி உயர்வு: இரட்டை பட்டப்படிப்புக்கு தடை



T




சிவகங்கை: 
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நேரடி நியமனம், பதவி உயர்வுக்கு இரட்டை பட்டப்படிப்பு செல்லாது என, சி.இ.ஓ.,க்களுக்கு, கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அரசின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்கள் ஒரே ஆண்டில் இரட்டை பட்டப்படிப்பு பெற்றிருந்தால், அந்த தகுதி அடிப்படையில், நேரடி நியமனம் செய்ய தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில், தொடக்க கல்வித்துறையில் பல்வேறு தொகுப்பு வழக்குகள் தொடர்பாக, சென்னை ஐகோர்ட் 2012 ஆகஸ்ட் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், அனைத்து பல்கலை.,களில் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவர், இரட்டை பட்டப்படிப்பு மூலம் ஓராண்டில் (2 பட்டபடிப்பு) பெறும் பட்டத்தை 3 ஆண்டு பட்ட படிப்பிற்கு இணையாக கருத முடியாது. எனவே, பணி நியமனம், பதவி உயர்வுக்கு, இத்தகுதிகளை ஏற்க கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி : கல்வி மலர்