TAANAKS VNR செய்திகளை உங்கள் மொபைலில் பெறுவதற்கு ON TAANAKS-NEWS என்று டைப் செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.

Monday, April 9, 2012

அரசுஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ! ஆண்டுக்கு ஆயிரத்து 383 கோடி கூடுதல் செலவு;ஜெ.,அறிவிப்பு


சென்னை: 
ஆண்டுதோறும் வழங்கப்படும் அக விலைப்படி உயர்வு முதல்வர் ஜெ., காலத்தில் உரிய நேரத்தில் நமக்கு கிடைக்குமா என்ற ஏக்க பெருமூச்சில் இருந்த அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் உயர்த்தி வழங்குவதாக முதல்வர் ஜெ., அறிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர் சங்கத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த அறிவிப்பை இன்றைய சட்டசபையில் அவர் வெளியிட்டார். முதல்வர் ஜெ., சபையில் இது குறித்து பேசுகையில்: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 7 சதம் வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு வழங்கியது போல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதன்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள். ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், என மொத்தம் 18 லட்சம் பேர் பயன்பெறுவர். இந்த படி , ஜனவரி மாதம் ( 1. 1. 12 ) என முன் தேதியிட்டு நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 383.49 கோடி வழங்கப்படும். இவ்வாறு ஜெ., தெரிவித்தார்.

No comments:

Post a Comment